இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் நாள்!!!

தீபாவளி என்னும் தீப ஒளித்திருநாள் என்பது 2 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது இந்து மதத்தின் பண்டிகையாக இருந்தாலும், பெரும்பாலும் மற்ற மதங்களை சார்ந்தவர்களும் புதுத் துணிகளை எடுத்து, குழந்தைகளுக்கு அணிவித்து பட்டாசுகளை வாங்கி…

தீபாவளி என்னும் தீப ஒளித்திருநாள் என்பது 2 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது இந்து மதத்தின் பண்டிகையாக இருந்தாலும், பெரும்பாலும் மற்ற மதங்களை சார்ந்தவர்களும் புதுத் துணிகளை எடுத்து, குழந்தைகளுக்கு அணிவித்து பட்டாசுகளை வாங்கி வெடித்து மகிழ்கின்றனர்.

இப்பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாது இன்ன பிற  நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

522d0f0ec8a54bde56bdf591254a7e90

ஆனால் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் தான் தீபாவளி கொண்டாடப்படுகிறதா என்றால் இல்லவே இல்லை. ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக தீபாவளியானது ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை போன்ற நாட்களிலும் அல்லது அதற்கடுத்து வரும் சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டினைப் பொறுத்தவரை தீபாவளியானது ஐப்பசி மாத அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலத் தேதியினைப் பொறுத்தவரை தீபாவளியானது அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கி, நவம்பர் மாத 22 ஆம் தேதிக்குள் உள்ளான  நாட்களில் தீபாவளி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன