தண்ணீர் தேவதை

By Staff

Published:

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் விரைவில் உலகிலேயே முதல் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போகிறது. அடுத்தடுத்து இது போன்று தண்ணீரே இல்லாத நகரமாக மாறக்கூடிய பட்டியலில் பெங்களூரும் சேர்ந்துள்ளது.

இந்த பெரும் பிரச்சனையை எதிர்கொள்வதற்கு தண்ணீர் சிக்கனம் அல்லது முறையான பயன்பாடு குறித்த சில ஆலோசனைகள் கீழே:

1. பல் துலக்கும்போது தண்ணீர் குழாயைமுழுவதும்  திறக்காமல் தேவையான போது மட்டும் திறக்கவும், அதே போல தலைக்கு குளிக்கும் போது தேவையான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும்.

3. கோடை காலத்தில் தோட்டத்தில் எதையும் பயிரிட வேண்டாம், இந்த பருவத்தில் நீர் தேவை மிகவும் அதிகமாக இருக்கும்.

4. உணவு சமைக்கும் பாத்திரங்களில் தீய்ந்த கறை இருக்கும்படியாக சமைக்க வேண்டாம். இதனால் நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது.

5. அவ்வப்போது குழாய்களில் ஏற்படும் தண்ணீர் கசிவை சோதிக்கவும். ஒரு சிறிய கசிவு இருந்தால் கூட கூடுதல் தண்ணீர் செலவை ஏற்படுத்தும்.

6. கழிப்பறை குழாய்க்குள் அடைத்துக் கொள்ளும் படியான பொருட்களை போடுவதை தவிர்ப்பதன் மூலம் கூடுதல் தண்ணீரைப் பயன்படுத்துவதை நிறுத்த முடியும். எடுத்துக்காட்டாக நாப்கின்கள் மற்றும் சிகரெட்  துண்டுகள். இவற்றால் கூடுதலாக 10 முதல் 15 லி தண்ணீர் வரை செலவாகும்.

7. வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும் போது, ​​முழுமையாக வாஷிங்மெஷின் சுமை அளவுக்கு போடுங்கள்.

8. மழைபொழியும்போது அந்த நீரை சேமிக்க பழகுங்கள்.  நீங்கள் பெரிதும் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு குறைக்க சில சமயம் இந்த மழை நீரும் உங்களுக்கு உதவலாம்.

 

9. புல்வெளியில் தண்ணீர் ஊற்றும்போது மாலை நேரத்தில் ஊற்றுங்கள்.

10. நீர்ப்பாசனம் செய்யும்போது தெளிப்பான் சரியான முறையில் அமைக்கப்படுவதை உறுதிசெய்துகொள்வதால், தண்ணீரை தேவையற்ற இடங்களுக்கு செல்லாது.

11. மழைநீர் சேமிப்பு அமைப்பை அமைத்துக் கொள்ளுங்கள்!

12. அவசரகாலத்தில் உங்கள் நீர் குழாயை எவ்வாறு மூட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? பிளம்பர் அல்லது தண்ணீர் நிபுணர்களிடமிருந்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். அவர் விரைவாகவும் எளிதாகவும் எந்தவொரு சிக்கலையும் எளிதில் கண்டுபிடிப்பார்.

13. உங்கள் குழந்தைகளுக்கு  தண்ணீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் மேலும் அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்!

14. சுத்தம் செய்வதற்கு  தண்ணீர் குழாய்க்கு பதிலாக வேக்வம் கிளீனர் அல்லது விளக்குமாறு அல்லது பிற கருவிகளைப் பயன்படுத்துங்கள்.

15. உங்கள் தாவரங்களை சுற்றி இலைமூடாக்கு போன்று ஒரு அடுக்கு உருவாக்குவதால் அவை நீண்ட காலத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவும்.

 

Leave a Comment