மறந்துப்போன மாட்டுப்பொங்கல்

By Staff

Published:

இன்னிக்கு ஒரு வாழ்க்கையின் வெற்றியாளனின் அடையாளமாய் கார், மொபைல், பிளாட்ன்னு இருக்குற மாதிரி அந்தகாலத்தில் மாடுகள் இருந்தது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளே ஒருநாட்டின் செல்வத்தின் அடையாளமா இருந்ததாய் குறிப்புகள் சொல்கின்றது.“ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ன்ற பட்டப் பெயர்களெல்லாம் அப்ப புழக்கத்தில் இருந்தது. “ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது’ என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னிருந்து இழுத்து செல்பவை மாடுகளே! இப்பதான் போர்போட்டு தண்ணிய இழுக்குறோம். முன்னலாம் கலயம்மூலமாதான் நீர் இறைச்சது. அந்த கலயம் கட்டிய கயிற்றினை இழுப்பது மாடுகள்தான். அறுவடை முடிஞ்சபின் நெல் தனியா, வைக்கோல் தனியா பிரிக்க மாடுகள்தான் உதவும். அறுவடை செஞ்ச தானியங்கள் வீடு வந்து சேர வண்டி இழுக்க உதவுவதும் மாடுகள்தான். இப்படி, உலகம் உயிர்ப்போடு இருக்க தன்னாலான உதவிகளை மாடுகள் செய்கின்றதுது.

88af9750d0fcfebc367f82cab47234f9

காளை மாடுகளின் துணைக்காக பசு மாடுகளும் வீட்டில் வளர்க்கப்பட்டது. பசுக்கள் பால், தயிர், வெண்ணெய்ன்னு நமக்கு வருமானத்துக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும், விவசாயத்துக்கு உதவும் காளைமாடுகளை ஈன்றெடுக்கவும்.இப்படி எல்லா விதத்திலும்  நமக்கு மாடுகள் உதவுவதால் மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்.

201807101212525514_some-information-on-gomaatha_secvpf

பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதாக நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்காங்க. அதனால்  பசுவை வணங்கினால் அனைத்து தேவர்களையும் வணங்குவதற்கு ஈடாகும். மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். மாடுகளை சுத்தம் செய்து, கொம்புக்கு வர்ணம் பூசி பலூன், பட்டு துணி, சலங்கை கட்டி அலங்கரித்து பொங்கலிட்டு படைத்து முதலில் மாடுகளுக்கு ஊட்டிய பின்னரே தாங்கள் உண்ணுவதை வழக்கமாய் வச்சிருக்காங்க.  இந்த நாளில் முறைமாமன்களின்மீது மஞ்சள் தண்ணீரை இறைப்பது தென்மாவட்டங்களின் வழக்கம்.

அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்

Leave a Comment