பெண்மானே பொன்னூஞ்சல் ஆட‘வா’!!

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதிலும் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நகை, புடைவைன்னு பெண்களை மகிழ்விக்கும் பொருட்களில் ஊஞ்சலுக்கு ஒரு தனி இடமுண்டு. வீட்டுக்குள் தொலைக்காட்சி, அலைப்பேசிலாம் வராத காலத்தில் பெண்கள்லாம் ஊருக்கு…

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதிலும் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நகை, புடைவைன்னு பெண்களை மகிழ்விக்கும் பொருட்களில் ஊஞ்சலுக்கு ஒரு தனி இடமுண்டு.

0ac08b8af7ac486e0752d8ced371e0e1

வீட்டுக்குள் தொலைக்காட்சி, அலைப்பேசிலாம் வராத காலத்தில் பெண்கள்லாம் ஊருக்கு வெளியேயும், வீட்டு கொல்லையிலும், முற்றத்துலயும் ஊஞ்சல் ஆடினாங்க.  அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஊஞ்சல் ஆடுவது குறைஞ்சு இப்ப காணாமலே போய்ட்டுது. ஊஞ்சல்  ஆடுவது மனசுக்கும், ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதனால்தான் முனு வீடுகளில் ஊஞ்சல் வச்சி கட்டினாங்க.

இப்ப வீடுகள் சுருங்கிட்டதால, ஊஞ்சல் அமைச்சு வீடு கட்டுவது குறைஞ்சுட்டுது. இப்படி இடவசதி குறைவாக இருக்கும் வீடுகளில்கூட கட்டுற மாதிரியான அமைப்புள்ள ஊஞ்சல்கள் இப்ப கடைகளில் கிடைக்கின்றது.

0fb36f99ed9eb8c18b9c9e39902cab5b

வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது குழந்தைகள், பெண்களுக்கு மட்டுமில்லாம கடவுளுக்கும்கூட பிடிக்கும்.  அதனால்தான் கோவில்களில் இறைமூர்த்தங்களை வச்சு ஊஞ்சலாட்டம் செய்விக்கப்படுகிறது

ஊஞ்சல் ஆடுவது பொழுதினை போக்க மட்டுமில்லாம மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கப்படுது. நேர்மறை எண்ணங்கள் உண்டாவதால் மனதில் மகிழ்ச்சியும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றது. இதனால்தான் திருமணங்களில் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடத்திவைக்கப்படுகிறது.

b949cf8cbe166fe449b40171f0b81f26

ஊஞ்சலில் அமர்ந்து நேராக  அமர்ந்து கைகளை உயர்த்தி இருபக்க சங்கிலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும்போது முதுகுத்தண்டுக்கு ரத்தம் ஓட்டம் பாய்ந்து மூளை சுறுசுறுப்பாகின்றது.  கம்ப்யூட்டர்முன் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப்போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடையும்.  தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது மேலும்அதிக பலனை தரும்.

மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராணவாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.  ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.  சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

b949cf8cbe166fe449b40171f0b81f26

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.  பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். அதுக்கு காரணம் வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுபவர்கள். அவர்கள் நம் வீட்டு ஊஞ்சலில் அமர்ந்து ஆடி, அதிக நேரம் நமது வீட்டில் தங்கி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.

e4ed7597cc19756cf33430daa0504bd5

சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் முன்பு வழக்கமாக இருந்தது.  இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.

வாஸ்துப்படி ஊஞ்சலை எங்கெல்லாம் அமைக்கலாம்?! அமைக்கக்கூடாதுன்னு இன்னொரு பதிவில் பார்க்கலாம். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன