சந்திரகிரகணம் என்றால் என்ன?!

By Staff

Published:

0ba2c67625581453444475ceffacc024

விகாரி வருடம் ஆடி 1ஆம் தேதி ஜூலை 17ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் நாளை இந்தியாவில் தெரியும். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை, உத்திரம், கிரகண தோஷ முள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்தி கொள்ளவும் என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கு.

சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் என்றும். சூரியனை நிலவு கடந்து செல்லும்போது, சிறிது நேரம் சூரியன் மறைக்கப்படுகிறது. இதை சூரிய கிரகணம் என்றும் அறிவியல்ரீதியாக சொல்லப்படுகிறது.

09e403710f25525ff693c10824d37345

அதன்படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி நிகழ்ந்தது. அதேப்போன்று நாளையும்(17/7/2019)அன்று சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் நாளை சரியாக இரவு 12.13 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்பு, 1.31 மணிக்கு உச்சம் அடைந்து, மத்திய காலம் இரவு 3 மணிக்கும், பின்னர், 4.30 மணிக்கு முடிகிறது. ஒட்டு மொத்தமாக சுமார் 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகணம் நிகழ உள்ளது.  இது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தோன்றுகிறது. திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி 16ஆம் தேதி மாலையிலிருந்து தரிசனங்களைத் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கிரகண சாந்தி செய்விக்கப்படுகிறது. இவ்வாறே அனைத்து கோவில்களிலும் கிரகண சாந்தி செய்விக்கப்படும்.

Leave a Comment