இனி சிம் இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம்… BSNL இன் புதிய ஏற்பாடு!

By Meena

Published:

சமீபத்திய காலங்களில் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்களை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் உயர்த்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்பாராத விதமாக வந்த கட்டண உயர்வு நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட BSNL கட்டண சேவையை குறைத்தது. இதன் காரணமாக பல ஏர்டெல் ஜியோ வாடிக்கையாளர்கள் BSNL சேவைக்கு லட்சக்கணக்கானோர் மாறி இருக்கின்றனர்.

அதற்கு அடுத்த கட்டமாக BSNL லைவ் டிவி ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் எங்கு சென்றாலும் உங்களால் லைவ் டிவியை காண முடியும் என்ற வசதியை கொண்டு வந்திருக்கிறது BSNL. இப்போது அதற்கும் ஒரு படி மேலாக போய் BSNL சிம் இல்லாமல் டேட்டா மற்றும் கால்களை செய்யும் வசதியை உருவாக்கி கொண்டிருக்கிறது. அதன் சோதனையையும் முடித்து இருக்கிறது.

செயற்கைகோளிலிருந்து நேரடியாக போனுக்கு கனேக்ஷன் செய்யும் செயற்கைக்கோள் இணைப்பின் சோதனையை BSNL உடன் இணைந்து ViaSat வெற்றிகரமாக நடித்தி முடித்து இருக்கிறது. இந்த சோதனையானது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.

வணிக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் sos மூலம் இயக்குகிறது. இந்த தொழில்நுட்பம் மொபைல் போன்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பிற சாதனங்களை சிரமமில்லாமல் எங்கும் இருந்து இயக்க அனுமதிக்கும். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான ViaSat, BSNL உடன் இணைந்து SOS செய்திகளை அனுப்பும் சோதனையை செய்திருக்கிறது.

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 இன் போது இந்த சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் மொபைல் போன்கள் ஸ்மார்ட் வாட்சுகள் அல்லது கார்கள் தொழில்துறை இந்திரங்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட் ஆபரேட்டர்களை செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் இணைக்க உதவுகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் தான் நேரடி சாதனை இணைப்பு D2D என்று விளக்குகிறது ViaSat . இது இந்தியாவிற்கு ஒரு சிறப்பான முன்னேற்றம் என்று கூறப்படுகிறது.

Tags: BSNL, ViaSat