Google Pay, PhonePe அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்! உங்களுக்கான அப்டேட் இதோ!

இந்தியாவில் பெரும்பாலான முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில்லரை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பல பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய்…

google pay1 1

இந்தியாவில் பெரும்பாலான முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில்லரை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பல பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன.

இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ATM வாசலில் மக்கள் நிற்பதும் முன்பை விட குறைந்துவிட்டது. Google Pay, PhonePe ஆப்களை கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களும் அவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.

தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் இந்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு புதிய கட்டுப்பாட்டை என்சிபிஐ விரித்துள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு வாடிக்கையாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் வரை மட்டுமே யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.

இது அந்தந்த வாடிக்கையாளர்களின் வங்கிகள் பொருத்து மாறுபடும். அதே போன்று 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 20 முறை மட்டுமே யூ பி ஐ மூலம் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். 21வது முறை அடுத்த நாள்தான் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus நிறுவனத்தின் முதல் ஃபோல்டிங் ஸ்மார்ட்போன்.. சாம்சங், மோட்டோரோலாவுக்கு போட்டியா?

அதே போன்று Google Pay, PhonePe ஆப்களில் இருந்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 பரிமாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும். இதற்கு ரூபாய் ஒரு லட்சம் லிமிட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி யூபிஐ வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.