தொழில்நுட்ப உலகில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அமேசான் நிறுவனம், தனது இந்திய விரிவாக்க பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள ராமனுஜம் ஐடி சிட்டியில், சுமார் 2.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளர்ச்சி மையத்தை அமைக்க, ‘WeWork’ என்ற நிறுவனத்திடம் இருந்து அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
இந்த புதிய வளர்ச்சி மையம், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ராமனுஜம் ஐடி சிட்டியில் அமைய உள்ளது. இந்த மையத்தில் 3,500 பணியாளர்கள் அமர்ந்து பணியாற்றக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. இந்த விரிவாக்கம், தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் அதன் வளர்ச்சித் திட்டங்களை உறுதிப்படுத்துகிறது.
அமேசானின் இந்த புதிய முதலீடு, தமிழகத்தில் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் அலுவலகங்களை அமைப்பது, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திறன்களைப் பிரதிபலிக்கிறது.
அமேசான் போன்ற நிறுவனங்களின் வருகை, தமிழ்நாட்டிற்கு உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவெடுக்க ஒரு சிறந்த வாய்ப்பை அளிப்பதாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
