நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் கிளைமேக்ஸில் கல்வியின் அவசியம் பற்றி ஒரு வசனம் கூறியிருப்பார். நம்மகிட்ட காசு இருந்தா பிடுங்கிடுவாங்க.. நிலம் இருந்தா எடுத்து பிடுங்கிடுவாங்க.. ஆனா நாம கற்ற கல்வியை மட்டுமே யாராலும் நம்மகிட்ட இருந்து எடுக்க முடியாது என்று பேசியிருப்பார். இந்த வசனம் நூற்றுக்கு நூறு உண்மையானது. எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் கல்வி என்ற ஒன்று இல்லையெனில் அது இருந்தும் வீண் தான்.
இப்படி நிறைய புகழ் இருந்தும், செல்வச் செழிப்பு இருந்தாலும் எனக்கு சினிமா வேண்டாம் என்று படித்து இன்று ஐஏஎஸ் ஆக ஜொலிப்பவர்தான் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவரைப் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் இவர் தந்தை யாரென்று தமிழகத்திற்கே தெரியும். அவர்தான் நடிகர் சின்னிஜெயந்த். 90-களில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர். தனது தனித்துவ மேனரிஸத்தால் ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர். இன்று குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
விக்கிரவாண்டியில் வியூகம் வித்திட்ட விஜய்.. லட்சம் தொண்டர்களுக்கு மத்தியில் அனல் பறக்கும் பேச்சு..
நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்தான் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இயக்குநர் பிரபுசாலமன் இயக்கிய தொடரி படத்தில் சின்னிஜெயந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனையடுத்து பிரபு சாலமன் சின்னிஜெயந்தின் மகனை தான் அடுத்து இயக்கப்போகும் கும்கி-2 படத்திற்காக நடிக்கக் கேட்டிருக்கிறார். சினிமா பிரபலம் என்பதால் தானாகவே ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் இந்த வாய்ப்பினை நிராகரித்தார். தன்னுடைய லட்சியம் கலெக்டர் ஆவதுதான் என்பதில் குறிக்கோளாக இருந்தார் சின்னிஜெயந்த் மகன்.
தந்தையும் மகன் ஆசைக்கு தடைபோடவில்லை. மகனின் படிப்பிற்கு உறுதுணையாக நின்றார். அதன்படி ஸ்ருதனும் விடாமுயற்சியாகப் படித்து இறுதியில் குடிமைப் பணியியல் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆனார். அன்று ஹீரோ வாய்ப்பினை அவர் தேர்ந்தெடுத்திருந்தால் இன்று சினிமாவில் எத்தனையோ ஹீரோக்களுக்கு மத்தியில் அவரும் பயணித்துக் கொண்டிருப்பார். ஆனால் அதைவிடுத்து அதிகாரம் உடைய மக்கள் பணியைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றிபெற்று இன்று திருப்பூர் மாவட்டத்தின் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார் ஜெய் நாராயணன்.
சமீபத்தில் சப் கலெக்டர் தூத்துக்குடி மாவட்டத்தில் சப் கலக்டர் பயிற்சியை முடித்தபின் தற்போது திருப்பூர் மாவட்டத்தின் சப் கலெக்டராகப் பொறுப்பேற்றிருக்கிறார். என்னதான் பிரபலத்தின் மகனாக இருந்தாலும் கல்வி ஒருவரை வாழ்வின் அடுத்த நிலையில் கொண்டு சேர்த்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். சமீபத்தில்தான் இவருக்குத் திருமணமும் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்குபெற்று வாழ்த்தினர்.