அவசர நிதி தேவைகளை சமாளிக்க, பெர்சனல் லோன் என்று கூறப்படும் தனிநபர் கடன் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தனிநபர் கடனுக்கான செயல்முறைகளை எளிதாக்கியுள்ளன. இருப்பினும், இந்த கடனை அணுகும்போது, சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வது அவசியம்.
தனிநபர் கடன் என்பது, ஒரு அவசர காலத்திற்கு அல்லது உடனடி நிதி தேவைக்கு உதவும் ஒரு பாதுகாப்பற்ற கடன். அதாவது, இந்த கடனை பெற நீங்கள் எந்த சொத்தையும் அடமானம் வைக்க தேவையில்லை. மாறாக, நீங்கள் ஒரு வீட்டுக் கடனோ அல்லது கார் கடனோ பெறும்போது, நீங்கள் வாங்கும் சொத்தே அடமானமாக இருக்கும்.
குறைந்தபட்ச ஆவணங்கள்: தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க, மிகக் குறைந்த ஆவணங்களே தேவைப்படும். பொதுவாக, அடையாள சான்று, முகவரி சான்று, மற்றும் வருமான சான்று ஆகியவை போதுமானவை.
விரைவான செயல்முறை: விண்ணப்பித்த சில மணிநேரங்களிலேயே கடன் தொகையை உங்கள் வங்கி கணக்கில் பெற முடியும். இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் விண்ணப்பிக்கும்போது இந்த செயல்முறை இன்னும் விரைவாக நடைபெறும். தனிநபர் கடன் தொகையை, நீங்கள் விரும்பும் எந்த அவசர தேவைக்கும் பயன்படுத்தலாம். மருத்துவ செலவு, திருமணம், அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தலாம். இந்தக் கடனை, உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப, நெகிழ்வான தவணைகளில் திருப்பி செலுத்தலாம்.
கடன் வழங்குபவர்கள், விண்ணப்பதாரரின் தகுதியை பல காரணிகளைக் கொண்டு மதிப்பீடு செய்கிறார்கள்.
நல்ல கிரெடிட் ஸ்கோர் ஒன்றே தனிநபர் கடன் பெற மிகவும் முக்கியமான தகுதி. உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நிலையான வருமானம் (Stable Income): உங்களுக்கு ஒரு நிலையான வருமானம் இருக்க வேண்டும். வங்கிகள் உங்கள் வருமானத்தை, நீங்கள் கோரும் கடன் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும். உங்கள் கடனை பாதுகாக்க, கிரெடிட் இன்சூரன்ஸ் போன்ற ஒரு பாதுகாப்பை வழங்குவது, கடனை எளிதாக பெற உதவும்.
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் இந்த எளிய படிகளைப் பின்பற்றலாம்:
ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள சான்றுகள் மட்டும் போதும். விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்து, அது 750-க்கு மேல் இருப்பதை உறுதிசெய்யவும்.
ஒரே நேரத்தில் பல வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டாம். ஏனெனில் இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். எனவே, உங்கள் தகுதிக்கு ஏற்ப ஒரே வங்கியில் மட்டும் விண்ணப்பிக்கவும். உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்யவும். உங்கள் பான் கார்டு மற்றும் பிற ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
கடன் பெற்ற பின் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்துவது, கடன்களை உரிய நேரத்தில் முடிப்பது ஆகியவற்றை மறக்காமல் செய்யவும்.
மொத்தத்தில் தனிநபர் கடன் ஒரு அவசர தேவைக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், கடனை பெறுவதற்கு முன் உங்கள் நிதி நிலைமையை நன்கு ஆராய்ந்து, கடன் தொகையை திருப்பி செலுத்தும் திறன் உங்களுக்கு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பொறுப்பான முறையில் கடனை பயன்படுத்தவும். ஆடம்பர செலவுக்கும், சுற்றுலா செல்வதற்கும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்கும் தனிநபர் கடன் பெற வேண்டாம். கல்வி, திருமணம் போன்ற அத்தியாவசிய செலவு இருந்தால் மட்டும் தனிநபர் கடன் பெறவும்.
கடன்பட்டார் நெஞ்சு போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது ராமாயணத்தில் வரும் ஒரு வரி. பெரும்பாலும் கடன் வாங்குவதை தவிர்த்து, நமக்கேற்ற வருமானத்திற்கு தக்கபடி செலவு செய்யுங்கள், அவசிய தேவை, வேறு வழியே இல்லை என்றால் மட்டும் கடன் வாங்கி, அதை திரும்ப சரியாக செலுத்தவும் திட்டமிடுங்கள். உங்கள் வாழ்க்கை எப்போதும் சிறப்பாக இருக்கும்..
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
