மனிதன் தன் வாழ்வின் அதிகபட்சமாக ஆசைப்படுவது அன்புடன் தன்னை அரவணைத்துக் கொள்ள ஒரு துணையை தான். அது எந்த இடத்திலும் கிடைக்காமல் போகும்போது தன் வாழ்வில் வெறுக்கிறார். அப்படி வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்தவர்களுக்கு 19 ஆண்டுகளாக தன் அரவணைப்பை அழித்து வருகிறார் ஜப்பானில் சேர்ந்த யூகியூ சிகே .இவருக்கு வயது 79.
இந்த தல்லாத வயதிலும் தினமும் தோசின் போ மலைக்கு செல்கிறார். அங்கு தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்களை காப்பாற்றுவதுதான் இவரின் வேலை . இந்த தோசின் போ மலையானது கடல் மட்டத்திலிருந்து 80 அடி உயரத்துக்குள்ளது. இது பிரபலமான சுற்றுலா தளம் மட்டுமல்லாமல் அதிக மக்கள் தற்கொலை செய்து கொள்ள இடமும் தான் இந்த தோசின் போ மலைகள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 25 பேராவது மலையில் இருந்து குதித்து இறக்கினற்னர்.
கையில் பைனாக்குழல் வைத்துக்கொண்டு கையுறைகளை அணிந்து கொண்டு தலையில் தொப்பி போட்டுக்கொண்டு மலைகளில் சுற்றி திரியும் யூகியூ சிகே தற்கொலை செய்ய முயற்சிப்பவரை தேடுகிறார்.
அப்படி மனிதர்கள் கண்ணில் பட்டால் ஓடி சென்று அவர்களை அங்கிருந்து அழைத்து வருகிறார்.
மேலும் தற்கொலை எண்ணம் இருப்பவர்களிடம் பேசி மனம் மாற்றி அவர்களுக்கு பருக தேநீர் கொடுத்து தங்க இடமும் கொடுக்கிறார்.அன்பாக அவரிடம் பேசி மனம் திறக்க வைக்கிறார், யாருக்கும் பொதுவாக சாக மனமிருக்காது.
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு வந்தால் அபராதம்!
தங்களை புரிந்து கொள்ள இந்த உலகில் யாருமில்லை என்பதால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்தான் இந்த எண்ணத்தை கையில் எடுக்கின்றனர் என யூகியூ கூறியுள்ளார். அப்படி கடந்த ஆண்டுகளாக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியில் இதுவரை 789 பேரை காப்பாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.மேலும் தன்னால் இயன்றவரை இந்த உன்னத பணியை செய்து கொண்டிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.