நித்தியானந்தா- க்கு போட்டியாக தனி நாட்டை உருவாக்கிய அமெரிக்கர்! சுவாரஸ்யமான தகவல் இதோ!

உலகம் முழுவதும் பயணம் செய்த அமெரிக்கர் ஒருவர் தனது சொந்த நாட்டை உருவாக்கியுள்ளார். ஸ்லோஜிமஸ்தான் குடியரசு என்ற நாடு அமெரிக்காவில் அமைந்துள்ளது. இது ராண்டி வில்லியம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. ராண்டி வில்லியம்ஸ் கலிபோர்னியா பாலைவனத்தில்…

23 6486fe7dbd09e 1

உலகம் முழுவதும் பயணம் செய்த அமெரிக்கர் ஒருவர் தனது சொந்த நாட்டை உருவாக்கியுள்ளார். ஸ்லோஜிமஸ்தான் குடியரசு என்ற நாடு அமெரிக்காவில் அமைந்துள்ளது. இது ராண்டி வில்லியம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.

ராண்டி வில்லியம்ஸ் கலிபோர்னியா பாலைவனத்தில் 11.7 ஏக்கர் காலி நிலத்தை 19000 டாலர் அதாவது 15 லட்சம் 66 ஆயிரத்து 920 க்கு வாங்கியுள்ளார்.அதில் தனது நாட்டை உருவாக்கி டிசம்பர் 1, 2021 அன்று தனி நாடாக அறிவித்தார் .

ராண்டி நாட்டிற்கு வழங்கிய அதிகாரப்பூர்வ பெயர் ஸ்லோஜிமஸ்தான் மக்கள் குடியரசின் இறையான்மை தேசத்தின் ஐக்கிய பிரதேசங்களாகும் .தனி நாட்டை உருவாக்கிய இந்த நபர் தன்னை சுலோஜ் மஸ்தான் சுல்தான் என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

டிசம்பர் 21 அன்று மதியம் 1.26 மணிக்கு குலோஜமஸ்தான் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரத்தை பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வில்லியம்ஸ் அதை தனது நாட்டின் தலைநகரில் நேரடியாக ஒளிபரப்பினார்.இந்த நாட்டிற்கு அதன் சொந்தகோடி, பாஸ்போர்ட், நாணயம் மற்றும் தேசிய கீதம் என பல வசதிகள் உள்ளது

ஸ்லோஜிமஸ்தான் குடியரசில் 500க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் உள்ளன மற்றும் 4500 க்கும் மேற்பட்ட  மக்கள் குடியுரிமைக்கும் விண்ணப்பித்துள்ளனர் . இந்த நாடு ஐக்கிய நாடுகளால் சான்றளிக்கபட்ட நாடுகள் இல்லை.இது மைக்ரோனேசன் என்று அழைக்கப்படும் குழுவை சேர்ந்தது .

அமோகமாக நடைபெற்ற ஆடு விற்பனை! பண்டிகைக்கு தயாரான மக்கள்!

ஆனால் வில்லியம் கூற்றுப்படி 1933 ஆன்ட்டி வீடியோ மாநாட்டில் வரையறுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட தேசிய அரசுக்கான அளவுகோல்களை தொழில்நுட்ப ரீதியாக ஈடு செய்துள்ளது. அதனால் தனிப்பட்ட நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.