அமோகமாக நடைபெற்ற ஆடு விற்பனை! பண்டிகைக்கு தயாரான மக்கள்!

 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பக்ரித் பண்டிகையை ஒட்டி காட்பாடி அருகே உள்ள கே.வி குப்பம் ஆட்டுச் சந்தைக்கு 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 ஆடுகளை கொண்டு வந்து குவித்தனர் .

காலை 5.30 மணிக்கு விற்பனை விறுவிறுப்பாக தொடங்கியது. அங்கு வெள்ளாடு ,செம்மறி, நெல்லூர் கிடா போன்ற பல்வேறு ரக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறிய ஆடுகள் பத்தாயிரம் ரூபாய் வரையிலும் பெரிய ஆடுகள் 40 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கர்நாடக ஆந்திர பகுதிகளில் இருந்தும் வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

யுபிஐ இருக்கா அப்போ ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி!

கே.வி குப்பம் சந்தைக்கு வரக்கூடிய ஆடுகள் வனப்பகுதிகளில் இயற்கையான செடிகளை உண்டு வளர்வதும் இவற்றின் கறிக்கு தனி மவுசு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews