மைதாவில் செய்யும் பரோட்டாவானது உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாய் உள்ளது, அதனால் மைதாவில் பரோட்டா செய்வதற்குப் பதில் கோதுமை மாவில் பரோட்டா செய்து சாப்பிடலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 250 கிராம்
வெள்ளைச் சர்க்கரை – 1 ஸ்பூன்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
பால் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- கோதுமை மாவுடன் உப்பு, சர்க்கரை, பால், கடலை எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
- அடுத்து மாவினை சப்பாத்தி போல் தேய்த்து, விசிறி போல் மடித்து தோசைக்கல்லில் போட்டு வேகவிடவும்.
- லேசாக ஆறவிட்டு மூன்று பரோட்டாக்களை கையால் வேகமாக குத்தினால் கோதுமை பரோட்டா ரெடி.