சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கோதுமை மாவில் கருப்பட்டி போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கோதுமை மாவு- கால் கிலோ
கருப்பட்டி – 2 அச்சு
ஏலக்காய்த் தூள் – 3 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய் சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கருப்பட்டியினைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும். அடுத்து இதனுடன் ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
3. அடுத்து கோதுமை மாவினை சிறு உருண்டைகளாக உருட்டி நடுவே கருப்பட்டிப் பாகினை வைத்து நான்கு புறமும் மடித்து சப்பாத்தி கட்டையால் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்விட்டு எடுத்தால் கோதுமை மாவு போளி ரெடி.