கிராமத்து இனிப்பு சுழியம் ரெசிப்பி!!

By Staff

Published:

e15ad30c1ff21d847209a8cdc717884a

கிராமத்தில் பொதுவாக பண்டிகைகளின்போது செய்யப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றுதான் சுழியம். இந்த சுழியத்தினை செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:
மைதா மாவு- 2 கப் 
கடலைப் பருப்பு- கால் கிலோ
தேங்காய்- 1 மூடி
வெல்லம் – 1 கப்
ஏலக்காய்த் தூள் – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் பிசையவும். 
2. அடுத்து கடலைப்பருப்பினை 3 மணி நேரம் ஊறவிட்டு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்கி மத்தால் ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தினைப் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெல்லப்பாகுடன் கடலைப்பருப்பு,  ஏலக்காய்த்தூள் சேர்த்து ஆறவிட்டு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
4. இந்த உருண்டையினை மைதா மாவுக் கரைசலில் போட்டு எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் சுழியம் ரெடி.
 

Leave a Comment