ரொம்பவும் டேஸ்ட்டியான சிக்கன் பக்கோடா!!

By Staff

Published:

da4df3bc58abe143b7e71387e70aecd7

சிக்கனில் நாம் பிரியாணி, கிரேவி, புலாவ், ப்ரை, வறுவல், சில்லி என பலவகையான ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இப்போது சிக்கனில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

சிக்கன் – கால் கிலோ  

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
பஜ்ஜி மாவு – 3 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு

 

செய்முறை :

1. சிக்கனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. அடுத்து அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கலவையினைப் போட்டு பொரித்து எடுத்தால், சிக்கன் பக்கோடா ரெடி.

Leave a Comment