வெள்ளை வெளேர்ன்னு கெட்டியா, காரமில்லாத ஹோட்டலில் பரிமாறப்படும் தேங்காய் சட்னியை விரும்பாத ஆட்கள் யாராவது உண்டா?! ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல். : 1 கப்
பொரிகடலை. : 1/2 கப்
பச்சை மிளகாய். : 3
பூண்டு. : 2 பல்
புளி. : சிறிது
கடுகு. : 1 டீஸ்பூன்
உளுந்து. : 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம். : 5(பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை. : சிறிது
செய்முறை
தேங்காய் துருவல், பொரிகடலை, பச்சை மிளகாய், பூண்டு, புளி மற்றும் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பிறகு வானலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து சட்னியில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
சூடான இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமாக்கு ஏற்ற சைட் டிஷ் இது.