முதியவர்களுக்கான உளுந்து கஞ்சி ரெசிப்பி!!

By Staff

Published:

78c291b35c09e5531a43729093dce8a8

உளுந்து நமது முதுகெலும்பு, மூட்டு எலும்பு என அனைத்தையும் வலுப்படுத்துவதால் கட்டாயம் இதனை முதியவர்கள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

தேவையானவை: 
அரிசி – 1/4 கப் 
உளுந்து – 1/2 கப் 
சுக்குத் தூள் – 1 ஸ்பூன் 
தேங்காய் – 1 மூடி
பால் – 1/2 லிட்டர் 
வெல்லம்- 2

செய்முறை:
1.    அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் 3 மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து மாவு, தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
3.    பாலை கொதிக்க வைத்துக் கொள்ளவும். அத்துடன் வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிடவும்.
4.    அடுத்து இத்துடன் சுக்குத் தூள், தேங்காய் துருவல், பால் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கினால் உளுந்து கஞ்சி ரெடி.
 

Leave a Comment