பசிக்காத குழந்தையும் ஆசையா சாப்பிடும் மாங்காய் சாதம்! எப்படி செய்யணும் தெரியுமா? இதோ ரெசிபி!

By Velmurugan

Published:

மே மாதம் சொன்னாலே நம்ம நினைவுக்கு வருவது மாம்பழம் தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி சாப்பிதுவங்க. நம்ம இப்படி ஆசையா சாப்பிடும் மாம்பழத்துல பல சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கும் முழுசா சேரணுமா.. அப்போ இந்த மாங்காய் சாதம் செய்து கொடுங்க , விரும்பி சாப்பிடுவாங்க…

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப் (சமைத்தது)
மாம்பழம் – 1 கப் (துருவியது)
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு (நறுக்கியது)
சிவப்பு மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
கொத்தமல்லி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை முறை

கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும் .

அதனுடன் நறுக்கிய இஞ்சி, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

செம! இந்த ஒரு ஜுஸ் போதும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்…!

அடுத்து துருவிய மாங்காய், உப்பு சேர்த்து மாங்காய் வதங்கும் வரை நன்கு வதக்கவும்.

அதில் வேகவைத்த அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும். மாங்காய் சாதம் பரிமாற தயாராக உள்ளது.