தேவையான பொருட்கள்…
பிரண்டை
நல்லெண்ணெய் – 4 மேஜைக்கரண்டி, வரமிளகாய் – 10
புளி – சிறிய எலுமிச்சை அளவு பூண்டு – 10 பற்கள்
கடலைப்பருப்பு – 1 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 மேஜைக்கரண்டி தேங்காய் – அரை மூடி
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை…
முதலில் பிரண்டையை நன்கு கழுவி, அதின் மேலுள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டு பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். பின் வாணலில் நல்லெண்ணையை ஊற்றி, காய்ந்ததும் பிரண்டையின் தண்டுப்பகுதிகளைப் போட்டு நன்கு நிறம் மாறி பச்சை வாசனை போகும்வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் சிறிது நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக தேங்காயை துருவி சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் வதக்கிய பிரண்டையுடன் , புளி சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டை துவையல் தயார்.
டிப்ஸ்………..
பிரண்டை அரிக்கும் தன்மையுடையது. அதனால் அதை நன்கு வதக்க வேண்டும். பிரண்டையை தோல் உரித்து சுத்தம் செய்யும் போது, கைகளில் சிறிதளவு நல்லெண்ணையை தடவி கொள்ளவும்.
பிரண்டை குழந்தைகளின் ஞாபகத்திறனை மேம்படுத்தும்.எலும்பு முறிவை சரிபடுத்தவும், எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது. வயிற்று உப்பசம், ஆஸ்துமா, வாயு பிடித்தல் இப்படி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.