இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமான காம்பினேஷன்களில் ஒன்றுதான் தக்காளி பச்சடியுடனான காம்பினேஷன். இப்போது நாம் தக்காளியினைக் கொண்டு பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை
தக்காளி – 3
பெரிய வெங்காயம் – 1
கடுகு – 1 டிஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு சுடுதண்ணீர் ஊற்றி போட்டு வைக்கவும் . அடுத்து அதன் தோலை உரித்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் .
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து சுண்டும்வரை வதக்கவும்.
4. அடுத்து உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் தக்காளி பச்சடி ரெடி.