சப்பாத்தி அனைவருக்கும் பிடித்த உணவு மட்டும் அல்ல. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு என்று சொல்லலாம். இந்த சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டும் என்று பலரும் சிரத்தை எடுத்து மாவு பிசைவர். இந்த சப்பாத்தி சாஃப்டாக அதே சமயம் சுவையாக இருக்க இதோ உங்களுக்காக சில டிப்ஸ்கள்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது வெந்நீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்தால் போதும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
தோசை மாவு முடிந்ததா? இதோ காலை டிபனுக்கு சுவையானமுட்டை கார தோசை…!
மாவுடன் சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி கூடுதல் சுவையோடு இருக்கும். குழந்தைகளுக்கு சப்பாத்தி உடன் ஏலக்காய் சேர்த்த பாலை ஊற்றி ஊற வைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சப்பாத்தி தேய்க்கும் பொழுது மிகவும் மெல்லியதாக இல்லாமல் சற்று தடிமனாக தேய்க்க வேண்டும்.
சப்பாத்தி மாவுடன் சிறிது எண்ணெய் மற்றும் நெய் விட்டு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் இருக்கும், நல்ல சுவையாகவும் இருக்கும்.
சப்பாத்தியை நன்கு திரட்டி அதன் மேல் எண்ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒரு முறை திட்டினால் சப்பாத்தி உப்பி வரும். அடுக்கடுக்காக நல்ல மிருதுவாக இருக்கும்.
சப்பாத்தி சுடும் பொழுது கல் சூடானதும் இருபுறமும் போட்டு எடுத்து பிறகு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.