பொதுவாக அல்வா வகைகளில் கேரட், பீட்ரூட், மஞ்சள் பூசணிக்காயில் அல்வா செய்து சாப்பிட்டு இருப்போம். இப்போது நாம் வெள்ளைப் பூசணிக்காயில் இப்போது அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வெள்ளைப் பூசணி – 2 துண்டு
சர்க்கரை – ½ கிலோ
நெய் – 150 மில்லி
பால்- கால் கப்
ஏலக்காய் – 2
முந்திரி – 10
பாதாம்- 10
செய்முறை
1. வெள்ளைப் பூசணிக்காயின் பட்டை சீவிக் கொள்ளவும். அடுத்து இதன் நடுவில் உள்ள வெள்ளைப் பாகத்தை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை நசுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் நெய் ஊற்றி வெள்ளைப் பூசணி துருவலைச் சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து இத்துடன் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
4. அடுத்து வேறொரு வாணலியில் ஏலக்காய்த் தூள், முந்திரி, பாதாம் சேர்த்து வதக்கவும்.
5. இதனை வெண் பூசணிக்காயில் போட்டு இறக்கினால் வெண் பூசணி அல்வா ரெடி.