டேஸ்ட்டியான வாலை மீன் குழம்பு!!

By Staff

Published:

003ca226d2ada7165b1694e9514e100f

வாலை மீன் முதியவர்கள் அனைவரும் சாப்பிட ஏற்ற மீன் வகையாகும். இது மூட்டு வலிப் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாய் கூறப்படுகின்றது. இப்போது நாம் வாலை மீனில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை:
வாலை மீன் – 500 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி -2
பூண்டு –   10 பல்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தனியா தூள்   – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1  ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2  ஸ்பூன்
கடுகு   – 1  ஸ்பூன்
கறிவேப்பிலை  – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
புளி- எலுமிச்சை அளவு

செய்முறை
1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை  போட்டு தாளித்து,  வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைப் போட்டு  வதக்கவும்.
3. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
4. அடுத்து இதனுடன் புளித் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கணவாய் மீனைப் போட்டு வேகவிடவும்.
5. எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கினால் வாலை மீன் குழம்பு  ரெடி
 

 

Leave a Comment