ரசம் என்று எடுத்துக் கொண்டால் மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் எனப் பலவகைகள் உண்டு. இவற்றில் அதிகம் பேர் விரும்பி உண்ணுவது என்னவோ தக்காளி ரசத்தைத் தான்.
தேவையானவை:
தக்காளி – 4
பூண்டு – 1
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய் மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். புளியை நீரில் கரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் 3 தக்காளியைப் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். ஒரு தக்காளியை கைகளால் பிசைந்து கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொடித்த பொடியினைப் போட்டு வதக்கி அரைத்த தக்காளியைப் போட்டு, புளித் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
4. நன்கு கொதித்த பின்னர் உப்பு, கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் தக்காளி ரசம் ரெடி.