டேஸ்ட்டியான தக்காளி ஊறுகாய் ரெசிப்பி!!

By Staff

Published:

7292edf06142cbaebef120d454fdc338

ஊறுகாயில் நாம் பொதுவாக எலுமிச்சை மற்றும் மாங்காயில்தான் செய்வோம். ஆனால் இவை இரண்டையும் விட சுவைமிக்கது என்றால் அது தக்காளி ஊறுகாய்தான். இப்போது நாம் சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
தக்காளி – ஒரு கிலோ,
பூண்டு –  1
காய்ந்த மிளகாய் –  5,
வெல்லம் –  சிறிதளவு,
கடுகு –  2 ஸ்பூன்,
வெந்தயம் – 1 ஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் –தேவையான அளவு,

செய்முறை :
1. தக்காளியை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து பூண்டின் தோலை உரித்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு போட்டு தாளித்து, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி  பூண்டைப் போட்டு வதக்கி தக்காளியை சுண்டும்வரை வதக்கவும்.
4. அடுத்து மஞ்சள்தூள், வெல்லம், பொடித்த தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நல்லெண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கினால் தக்காளி ஊறுகாய் ரெடி.
 

Leave a Comment