இட்லி வகைகளில் குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுவது என்னவோ மசால் இட்லி ரெசிப்பியைத் தான். இப்போது நாம் சுவையான மசாலா இட்லி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
இட்லி- 4
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
கடுகு- ½ ஸ்பூன்
கடலைப் பருப்பு- ½ ஸ்பூன்
உளுந்து- ½ ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ½ ஸ்பூன்
மல்லித் தூள்- ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவியயான அளவு
செய்முறை :
1. இட்லி, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
3. அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
4. அடுத்து மிளகாய்த்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி இட்லியினைப் போட்டு கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினல்
மசாலா இட்லி ரெடி.