உருளைக் கிழங்கில் இப்போது நாம் தயிர் சாதத்திற்கு வைத்து சாப்பிடும் வகையிலான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
உருளைக் கிழங்கு -1 /2 கிலோ
வெங்காயம்-3
மிளகுத் தூள் -2 ஸ்பூன்
கடுகு- ¼ ஸ்பூன்,
சீரகம்- 1/4 ஸ்பூன்,
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
செய்முறை:
1. உருளைக் கிழங்கை வட்டவடிவில் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2
2. அடுத்து வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
4. அடுத்து வெங்காயம், உப்பு, உருளைக் கிழங்கை போட்டு வதக்கவும்.
5. அடுத்து மிளகுத் தூள் போட்டு கிளறி இறக்கினால் உருளைக் கிழங்கு வறுவல் ரெசிப்பி ரெடி.