டேஸ்ட்டியான பெப்பர் சிக்கன் ரெசிப்பி!!

By Staff

Published:

178a6f1aa036d256f7a90bb701ae1143-1-2

சிக்கனில் நாம் பொதுவாக கிரேவி, வறுவல், பிரியாணி வகைகளையே செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சிக்கனில் சுவையான பெப்பர் சிக்கன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
 
சிக்கன் – 1/2 கிலோ
மிளகாய்த் தூள் – 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சி- 1 துண்டு, 
பூண்டு  – 1/2 
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
 
செய்முறை :

1. வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள் போட்டு 10 நிமிடம் என்ற அளவில் ஊறவிடவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
4. அடுத்து இஞ்சி- பூண்டு பேஸ்ட்டுடன் சிக்கன், மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
6. அதன்பின்னர் மிளகுத் தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால் பெப்பர் சிக்கன் ரெடி.
 

Leave a Comment