பாதுஷா குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் வகையிலான ஒரு இனிப்பு வகையான இருந்து வருகின்றது. இத்தகைய பாதுஷாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மைதா – 250 கிராம்,
சர்க்கரை – 250 கிராம்,
சமையல் சோடா – 1 ஸ்பூன்
நெய் – 20 மில்லி
டால்டா – 100 கிராம்
பால் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சமையல் சோடா, டால்டா, நெய், பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
2. அடுத்து இதனை பாதுஷா வடிவில் உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரையைப் போட்டு பாகுபோல் காய்ச்சி ஆறவிட்டு, அதில் பாதுஷாக்களை போட்டு 24 மணி நேரம் ஊறவிட்டால் பாதுஷா ரெடி.