மட்டனில் பொதுவாக நாம் குழம்பு, கிரேவி, பிரியாணி, சுக்கா போன்ற ரெசிப்பிகளையே செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது மட்டனில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மட்டன் – 100 கிராம்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. மட்டனை மைய வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் மட்டன், மிளகு, சீரகம், தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து மிக்ஸியில் மட்டன், உப்பு சேர்த்து அரைத்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால், மட்டன் வடை ரெடி.