டேஸ்ட்டியான மட்டன் பெப்பர் ஃப்ரை ரெசிப்பி!!

By Staff

Published:

a3a3e2bc9811d926d4c2e5d8c38279e6

மட்டனில் மிகவும் ருசியான ரெசிப்பி ஒன்றினைத் தான் நாம் இப்போது எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். அதாவது நாம் மட்டனில் இப்போது பெப்பர் ஃப்ரை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :
 மட்டன் – 1/2 கிலோ
மிளகாய்த் தூள் – 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சி- 1 துண்டு, 
பூண்டு  – 1/2 
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
 
செய்முறை :
1. வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து மட்டனுடன் உப்பு, மஞ்சள் தூள் போட்டு 10 நிமிடம் என்ற அளவில் ஊறவிடவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
4. அடுத்து இஞ்சி- பூண்டு பேஸ்ட்டுடன் மட்டன், மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
6. அதன்பின்னர் மிளகுத் தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால் மட்டன் பெப்பர் ஃப்ரை ரெடி.

Leave a Comment