காளானில் பொதுவாக பிரியாணி, வறுவல், கிரேவி ரெசிப்பிகள்தான் செய்வோம். இப்போது நாம் காளானில் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
காளான்- கால் கிலோ
வெங்காயம்- 3
தக்காளி- 2
பச்சை மிளகாய்- 2
கறிவேப்பிலை- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
கடுகு- 1 ஸ்பூன்
உளுந்து- 1 ஸ்பூன்
தனியாத் தூள்- 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன்
சீரகத் தூள்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1. காளானை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காளான் போட்டு வதக்கவும்.
3. அடுத்து தனியாத் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியவிட்டு இறக்கினால் காளான் தொக்கு ரெடி.