பாசிப் பருப்பானது அதிக அளவில் புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, இதனை குழம்பாகவோ, கூட்டாகவோ குழந்தைகள் சாப்பிட விரும்பவில்லையெனில் அவர்களுக்கு பாசிப்பருப்பில் அல்வா செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.
தேவையானவை
பாசிப் பருப்பு – 1/2 கப்
வெல்லம்– 3/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
நெய் – 2.5 ஸ்பூன்
முந்திரி- 5
உலர் திராட்சை- 5
செய்முறை:
1. பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். அடுத்து குக்கரில் பருப்புடன் நீர் சேர்த்து விசில்விட்டு வேகவிடவும்.
2. மேலும் அதனை மசித்து ஏலக்காய் தூள், வெல்லம் சேர்த்து வேகவிடவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, உலர் திராட்சை சேர்த்து லேசாக வறுத்து பருப்புடன் சேர்த்து கிளறினால் பாசிப்பருப்பு அல்வா ரெடி.