மக்ரோனி குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் உணவாகும். இப்போது நாம் மக்ரோனி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மக்ரோனி – 2 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நன்றாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்கும்போது மக்ரோனியை போட்டு வேகவிடவும்.
4. இறுதியாக கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால் மக்ரோனி ரெடி.