டேஸ்ட்டியான கிரில் சிக்கன் செய்யலாம் வாங்க!!

By Staff

Published:

b1a164aabdfe9548a591a1764fec762b

சிக்கனில் கிரில் சிக்கன் பொதுவாக பலரும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையாகும். இதனைப் பொதுவாக நாம் ஹோட்டல்களிலேயே வாங்கிச் சாப்பிட்டு இருப்போம். இப்போது வீட்டிலேயே கிரில் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

சிக்கன் – 1/2 கிலோ

மிளகாய்த் தூள் – 4 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

தயிர் – 1/2 கப்

முட்டை – 1

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

1. சிக்கனை கழுவி கத்தி மேல் கீறிக் கொள்ளவும்.

2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சிக்கன், கரம் மசாலா, மிளகுத் தூள், இஞ்சி- பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சோயா சாஸ், தயிர், முட்டை, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

3. அடுத்து மைக்ரோவேவ் ஓவனில் சிக்கன் மீது எண்ணெய் சேர்த்து ஓவனில் வைத்து 20 நிமிடம் வேகவைத்து எடுத்தால் கிரில் சிக்கன்  ரெடி.

Leave a Comment