கத்தரிக்காயில் சாம்பார், புளிக் குழம்பு, வறுவல், பொரியல் என எத்தனை ரெசிப்பிகள் இருந்தாலும் அவை நம்மில் பலருக்குப் பிடிக்காது. ஆனால் கத்தரிக்காயில் செய்யப்படும் எண்ணெய் கத்தரிக்காய் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையானவை:
கத்தரிக்காய் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
பூண்டு – 1
கடுகு – 1/4 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. கத்தரிக்காயின் காம்பின் நுனியினை லேசாக நறுக்கிய பின்னர் 8 துண்டுகளாக காம்பினை விட்டு நறுக்கி கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
4. அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி மிளகாய்த் தூள், தனியா தூள், சேர்க்கவும். அடுத்து புளி கரைசல், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
5. எண்ணெய் பிரிந்துவரும் போது இறக்கினால் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.