கொத்தமல்லி செரிமானத் தன்மையினை அதிகரிப்பதாக உள்ளது. கொத்தமல்லி இலையில் இப்போது சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
சிக்கன் – 500 கிராம்
கொத்தமல்லி இலை – 2 கட்டு
வெங்காயம் – 3
இஞ்சி- பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
தயிர் – கால் டம்ளர்
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அலசவும். அடுத்து கொத்தமல்லி இலையினை நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் சிக்கன், அரைத்த கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து கலந்து ஊறவைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
4. அடுத்து பச்சைமிளகாய், இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி தனியா தூள், மிளகாய்த் தூள் போட்டு வேகவைத்த சிக்கனைப் போட்டு வேகவிடவும்.
5. அடுத்து தயிரை சேர்த்துக் கிளறி எண்ணெய் பிரியும் போது இறக்கினால் கொத்தமல்லி சிக்கன் ரெடி.