டேஸ்ட்டியான சிக்கன் உருண்டை குழம்பு ரெசிப்பி!!

By Staff

Published:

3ed7a52b159bb338051e10e4f23f4dae

பொதுவாக உருண்டை குழம்பு என்றால் பருப்பு உருண்டை குழம்பினையே பலரும் ரசித்து சாப்பிடுவர். ஆனால் இன்று நாம் சுவையான சிக்கன் உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
சிக்கன் – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
பூண்டு – 1
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – ½ துண்டு
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

1. வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டினை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் எலும்புகளை நீக்கி சிக்கனைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். 
3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, மிளகு, கடலைப் பருப்பு, 
தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு  சேர்த்து அரைத்து அரைத்த சிக்கனையும் கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கசகசா போட்டு தாளிக்கவும்.
5. அடுத்து வெங்காயம், தக்காளி, போட்டு வதக்கி மிளகாய்த்தூள் மல்லித் தூள் சேர்க்கவும்.
6. அடுத்து தேங்காய் துருவல், சோம்பு, இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து ஊற்றவும்.
7. அடுத்து அரைத்துவைத்த சிக்கன் கலவையை உருண்டைகளாகப் பிடித்து குழம்பில் போட்டு கொதிக்க வைத்தால் சிக்கன் உருண்டை குழம்பு ரெடி.

Leave a Comment