டேஸ்ட்டியான சிக்கன் தொக்கு ரெசிப்பி!

By Staff

Published:

af89ec2fc03a4580dc248bfca3ecd2c6

சிக்கனில் நாம் பொதுவாக வறுவல், கிரேவி, பிரியாணி வகைகளையே செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது சிக்கனில் தொக்கு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
தேவையானவை:
சிக்கன் – ½  கிலோ
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி- 1 துண்டு,
பூண்டு- 1
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1  ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
பட்டை- 3
லவங்கம் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை- கைப்பிடியளவு, 
கொத்தமல்லி -கைப்பிடியளவு

செய்முறை:
 
1.    சிக்கனை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்காமல் பயன்படுத்தவும். 
2.    அடுத்து இஞ்சி பூண்டினை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.
3.    வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி- பூண்டு போட்டு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து தண்ணீர்விடாமல் வேகவிடவும். 
4.    இறுதியில் கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை  சேர்த்து கிளறி இறக்கினால் சிக்கன் தொக்கு ரெடி.

 

Leave a Comment