டேஸ்ட்டியான கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிப்பி!!

By Staff

Published:

a8e82bf267c3ab24f196c35da0a2b9cb

கத்திரிக்காயில் இப்போது சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கத்திரிக்காய் – அரை கிலோ,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
புளி – எலுமிச்சம் பழ அளவு,
மிளகாய்த் தூள் – 50 கிராம்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

1. கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து புளியுடன் தண்ணீர் ஊற்றி ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் கத்தரிக்காயினைப் போட்டு 24 மணி நேரம் ஊறவிட்டு 3 மணி நேரம் வெயிலில் நன்கு உலர்த்திக் கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய் போட்டு தாளித்து கத்தரிக்காயைப் போட்டு நன்கு வதக்கவும்.
5. அடுத்து அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கினால் கத்தரிக்காய் ஊறுகாய் ரெடி.

Leave a Comment