குழந்தைகள் ஏதேனும் ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று அடம்பிடித்துக் கேட்டால் உடனடியாக நாம் 15 நிமிடத்தில் இந்த ஸ்வீட்டை செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க.
தேவையானவை:
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1/2 கிலோ
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 1/4 கப்
முந்திரி – 1/4 கப்
பிஸ்தா – 1/4 கப்
குங்குமப்பூ – 1 ஸ்பூன்
செய்முறை :
1. பாதாம், பிஸ்தா, முந்திரியை துருவியால் துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கால் அளவு வரும் வரை சுண்டக் காய்ச்சவும்.
3. அதன்பின்னர் இத்துடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து 1 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்துக் குடித்தால் பாஸந்தி ரெடி.