சூப்பரான மசாலா இட்லி செய்யலாமா?

By Staff

Published:

317bb54d935c2ee0db2407048b4dbed8-1

இட்லி வகைகளில் பொடி இட்லி, மசாலா இட்லி, கார இட்லி, சில்லி இட்லி எனப் பல வகைகள் உண்டு, இவற்றில் இப்போது நாம் மசாலா இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

இட்லி – 5

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 3

வெங்காயம் – 2

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு- 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

கடுகு- தேவையான அளவு

செய்முறை :

1. தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும்.

2. இட்லியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.

4. அடுத்து வெங்காயத்தை வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

5. அடுத்து மிளகாய்த்தூள், இட்லி துண்டுகள் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மசாலா இட்லி ரெடி.

Leave a Comment