வீட்டுல காலைல டிபன் செய்றதுக்கு ஒண்ணுமே இல்லையா? என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக உள்ளதா? தினமும் இட்லி, தோசையே சாப்பிட போரடித்துவிட்டதா? அப்படின்னா கவலையை விடுங்க. இந்த சத்தான பிரேக் பாஸ்ட் செய்யலாம். எப்படின்னு பார்க்கலாமா..?
தேவையான பொருள்கள்
கத்திரிக்காய் – 2
முட்டை – 2
செய்முறை
இரண்டு கத்திரிக்காயையும் நல்ல மெல்லிசாக கட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை உடனடியாக ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு விடுங்க. நல்லா அலசி எடுத்துக் கொண்டு மீண்டும் தண்ணீரில் போடுங்கள்.
இப்போது அதனுடன் கால் கரண்டி மஞ்சள் தூளையும், அரை கரண்டி மிளகாய்த் தூளையும் சேருங்கள்.
அதனுடன் கால் கரண்டி கரம் மசாலாப் பொடியை சேருங்கள். தேவையான அளவு உப்பையும் போடுங்கள். மசாலாவைக் கத்திரிக்காயில் எல்லா இடமும் பரவும் விதத்தில் நல்லா கலந்து விடுங்க.
2 நிமிடம் ஊற விடுங்க. அதே சமயம் இன்னொரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைச்சி ஊற்றுங்க. அதனுடன் 2 சிட்டிகை மஞ்சள் தூள், கால் கரண்டி மிளகாய் தூள், தேவைக்கேற்ப உப்பு, அத்துடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து நல்லா கலக்குங்க. அதனுடன் சின்னதாக ஒரு கேரட்டைத் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது பொடிதாகக் கட் பண்ணிய கொத்தமல்லி இழைகளையும் சேருங்கள். கலவையை நல்லா கலக்குங்க. அதனுடன் சிறிதளவு வெங்காயத்தையும் கட் பண்ணி போட்டு கலந்து விடுங்க.
இப்போது அடுப்பைப் பற்ற வைத்து வாணலியில் எண்ணையை ஊற்றிக் காயவிடுங்க. மசாலா தடவிய கத்திரிக்காயை எடுத்து அதில் போட்டு வதக்குங்க. இப்போது நல்லா சிவந்ததும் அதைத் திருப்பி விட்டுக்கோங்க. சீக்கிரமே வெந்துடும்.
அதன் மேல முட்டைக்கலவையை ஊற்றிவிடுங்க. அதன் மேல் சப்பாத்தியைப் போட்டு திருப்பிப் போட்டு அப்படியே சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும். இது ஒரு விஜிடபிள் முட்டை சப்பாத்தி. இது கூட கொஞ்சம் டொமேட்டோ சாஸ் ஊற்றி ரோல் பண்ணி எடுத்துக்கலாம்.