இனிப்பை விரும்பாதவங்க யாருமில்லை. ஆனா, வீட்டிலேயே இனிப்பு தயாரிக்குறதுலாம் சிரமம்ன்னு அடிமனசில் பதிஞ்சு போய் இருக்கு. ஆனா, இந்த தேங்காய் பர்ஃபியை சுலபமாய் செய்துடலாம். குறைச்சலான பொருட்கள்தான் இதற்கு தேவைப்படும்.
தேவைப்படும் பொருட்கள்..
துருவிய தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
ஏலக்காய் தூள்- 4 (பொடித்தது)
நெய் – 4 ஸ்பூன்.
செய்முறை..
தேங்காயை துருவிக்கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கம்பிப் பாகு வைக்கவும். பாகு வெந்ததும் அதில் தேங்காய்த் துறுவலை சேர்த்துக் கிளறவும். நன்றாக சுருண்டு வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூளைச் சேர்த்து, நெய் ஊற்றி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். பாதி ஆறியதும், துண்டு போட்டு வைக்கவும். நன்றாக ஆறியதும் வில்லைகளை எடுத்து பரிமாறலாம்..
விருப்பப்பட்டால் பாதாம், பிஸ்தா பருப்புகளையும் சேர்க்கலாம்.