பாயாசம் என்றாலே சிலருக்கு கடுப்பாகும். ஜவ்வரிசியை வேக வைக்க, சேமியாவை குழையாமல் பார்த்துக்க என பல சோதனைகள் இருக்கு. ஆனா இந்த அவல் பாயாசத்தினை சுலபமாய் செய்யலாம்..
தேவையான பொருட்கள்..
அவல் –
வெல்லம் – 1/4 கப்
பால் – 2 கப்
ஏலக்காய் – 1
முந்திரிப்பருப்பு – 5
பாதாம் பருப்பு-5
திராட்சை -10
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை..
வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும். பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். பால் நன்றாக கொதித்து சுண்டி வரும்போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும்வரை வைக்கவும். 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும். ஏலக்காய், வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து சேர்த்து கலந்து இறக்கவும். வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.
சூப்பரான அவல் பாயாசம் ரெடி.