ஸ்ரீராம நவமி வழிபாட்டில் இந்த பாயாசத்தினை நைவேத்தியமாய் வைங்க! ராமன் அருள் கிட்டும்!!

By Staff

Published:


d9018ca1206a40a30bddc9e356e433ed

ராமன் எளிமையானவர் என எல்லோரும் அறிந்ததே! காட்டில் இருந்தபோது நீர் மோரும், பானகமும் மட்டுமே அருந்தினார். பொதுவாக, ராமர் இனிப்பு பிரியராம். அதிலும் வெல்லம் சேர்த்த இனிப்புகள்ன்னா கொள்ளை பிரியமாம். ராம நவமியான இன்று ராமருக்கு நைவேத்தியமாக அரிசி, வெல்லத்தினாலான அரிசி பாயாசத்தினை படைத்து தானம் செய்து ராமன் அருள் பெறுவோம்!!

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – அரை கப்

வெல்லம் பொடித்தது – 1 கப்

தேங்காய்த்துருவல் – 2 கப்

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி – தேவைக்கு

திராட்சை – தேவைக்கு

b7f00c6755d7b289f550cba0b312dd3d-1

செய்முறை :

அரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.  வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.  ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சற்று கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதில் கரைத்த வெல்லத்தை சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.  பாயாசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய தேங்காய், முந்திரி, திராட்சையை போட்டு சிவக்க வறுத்து பாயாசத்தில் சேர்த்துக் கலந்து பரிமாறவும். தித்திப்பான அரிசி பாயாசம் தயார்.

Leave a Comment