சிம்பிளாக செய்யக்கூடிய கார மசாலா இடியாப்பம்!!

By Staff

Published:

43439e7169176dc27079d041f9e04189

இடியாப்ப வகைகளில் கார மசாலா இடியாப்பம், இனிப்பு இடியாப்பம் என இரண்டு வகைகள் உண்டு, அவற்றில் கார மசாலா இடியாப்பம் ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
இடியாப்பம் – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
சோம்பு – 1/2 ஸ்பூன்
கிராம்பு – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை : 
1.    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை நறுக்கவும்.
2.    அடுத்து இடியாப்பம் செய்து கொள்ளவும்,
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு போட்டு தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து வெங்காயம், தக்காளி, புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
5.    அடுத்து இடியாப்பத்தை சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவவும்.
6.    இப்போது மசாலா இடியாப்பம் ரெடி.
 

Leave a Comment