சாம்பார் சாதத்திற்கு காரசாரமாக சேப்பங்கிழங்கில் வறுவல் செய்து வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இப்போது நாம் சேப்பங்கிழங்கில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
சேப்பங்கிழங்கு – ½ கிலோ
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
தனியாத் தூள் – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. சேப்பங்கிழங்கை கழுவி ஆவியில் வேக வைத்து தோல் உரித்து வட்டவடிவில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சேப்பங்கிழங்கினைப் போட்டு வதக்கவும்.
3. அடுத்து மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிட்டு இறக்கினால் சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி.